கார் விபத்தில் படுகாயம் அடைந்த கால்நடை மருத்துவர் சாவு

கார் விபத்தில் படுகாயம் அடைந்த கால்நடை மருத்துவர் சாவு

Update: 2021-10-31 17:15 GMT
உளுந்தூர்பேட்டை

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் பகுதியை சேர்ந்தவர் சுந்தரம் மகன் சுரேஷ்குமார் (வயது47). நாமக்கல் மாவட்ட கால்நடை மருத்துவ கல்லூரியில் துறைத் தலைவராக பணிபுரிந்து வந்த இவர் சம்பவத்தன்று காரில் புதுச்சேரிக்கு சென்று விட்டு  அங்கிருந்து மீண்டும் ராசிபுரம் நோக்கி வந்து கொண்டிருந்தார். உளுந்தூர்பேட்டை அருகே உள்ள மேட்டத்தூர் பகுதியில் வந்தபோது திடீரென கட்டுப்பாட்டை இழந்து தாறுமறாக ஓடிய கார் முன்னால் நடந்து சென்ற முதியவரை இடித்து விட்டு சாலையோர தடுப்பு சுவரில் மோதி விபத்துக்குள்ளானது.

 இதில் படுகாயம் அடைந்த முதியவர் நேற்று முன்தினம் உயிரிழந்தார். படுகாயம் அடைந்து விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றுவந்த சுரேஷ்குமார் சிகிச்சை பலன் இன்றி நேற்று பரிதாபமாக இறந்தார். விபத்து குறித்து திருநாவலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்