கிராம நிர்வாக அலுவலர்கள் சங்க தேர்தல்

திண்டுக்கல்லில் கிராம நிர்வாக அலுவலர்கள் சங்க மாநில தேர்தலுக்கு வாக்குப்பதிவு நடந்தது.

Update: 2021-10-31 17:03 GMT
திண்டுக்கல்: 

தமிழ்நாடு கிராம அலுவலர்கள் சங்கத்தின் மாநில தலைவர், துணை தலைவர், செயலாளர் ஆகியோருக்கான தேர்தல் தமிழகம் முழுவதும் நேற்று நடந்தது. தேர்தலையொட்டி அந்தந்த மாவட்டங்களில் உள்ள தாலுகா அலுவலகங்களில் வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டிருந்தன. இந்த மையங்களில் கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் சங்க உறுப்பினர்கள் சென்று வாக்களித்தனர்.


அதன்படி திண்டுக்கல்லில், மேற்கு தாலுகா அலுவலகத்தில் அமைக்கப்பட்ட வாக்குச்சாவடி மையத்தில் காலையில் இருந்தே சங்க உறுப்பினர்கள், நிர்வாகிகள் ஆர்வமுடன் வந்து வாக்களித்தனர். வாக்குச்சீட்டு முறைப்படி தேர்தல் நடந்தது. மாநில தேர்தல் ஆணையர் ராஜரத்தினம் தேர்தலை நடத்தினார். மாலை 5 மணி வரை வாக்குப்பதிவு நடந்தது. 

அதன் பின்னர் உடனடியாக வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன. இதில் மாநில தலைவராக ராஜேந்திரன், துணை தலைவராக நல்லாக்கவுண்டன், செயலாளர்களாக விஸ்வநாதன், அரங்க வீரபாண்டியன் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். தேர்லுக்கான ஏற்பாடுகளை கிராம நிர்வாக அலுவலர்கள் சங்க திண்டுக்கல் மாவட்ட செயலாளர் முருகன், பொருளாளர் மகேஷ் உள்பட பலர் தேர்தலுக்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர். முன்னதாக மாநில பொதுச்செயலாளராக சுரேஷ், பொருளாளராக முத்துச்செல்வன் ஆகியோர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர்.

மேலும் செய்திகள்