நாமக்கல்லில் பெண் தீக்குளித்து தற்கொலை

நாமக்கல்லில் பெண் தீக்குளித்து தற்கொலை

Update: 2021-10-31 17:03 GMT
நாமக்கல்:
நாமக்கல் ஏ.எஸ்.பேட்டையை சேர்ந்தவர் பெருமாள். இவரது மனைவி சாந்தி (வயது 35). நேற்று வீட்டில் தனியாக இருந்த சாந்தி உடலில் மண்எண்ணெய் ஊற்றி தீ வைத்து கொண்டார். இதில் உடல் முழுவதும் தீ பரவி படுகாயம் அடைந்த சாந்தி பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்து நாமக்கல் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்ததும் அங்கு விரைந்து சென்ற போலீசார் சாந்தியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக நாமக்கல் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சாந்தி தற்கொலை செய்து கொள்ள காரணம் என்ன? என்பது குறித்தும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். போலீசாரின் முதல்கட்ட விசாரணையில் சாந்தி சற்று மனநலம் பாதிக்கப்பட்டு இருந்து வந்தது தெரியவந்து உள்ளது.

மேலும் செய்திகள்