மழையால் குளங்களுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது

மழையால் குளங்களுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது

Update: 2021-10-31 16:51 GMT
காங்கேயம், 
காங்கேயம், முத்தூர், மூலனூர் பகுதியில் பெய்த மழையால் குளங்களுக்கு நீர்வரத்து  அதிகரித்துள்ளது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
மழை
காங்கேயம் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று பகல் முழுவதும் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. பின்னர் மதியம் லேசான தூரல் போடத் தொடங்கிய வானம் நேரம் செல்லச் செல்ல சற்று அதிகளவில் மழை பெய்தது.  இந்த மழையானது இரவு முழுவதும் நீடித்தது. இதனால்  இருசக்கர வாகன ஓட்டிகள் கடைவீதிகளுக்கு செல்வோர் மற்றும் பல்வேறு வேலைகளுக்கு செல்வோர் வீட்டிலேயே முடங்கினர். மேலும் அத்தியாவசிய தேவைகளுக்காக வெளியே செல்பவர்கள் மழையில் நனைந்தபடியே வாகனத்தில் சென்றனர். 
அதே போல் முத்தூர், நத்தக்கடையூர் பகுதியில் லேசான மழை பெய்தது. இந்த மழையால் சாலையோர வியாபாரிகள்  பாதிக்கப்பட்டனர். அவர்களுக்கு வியாபாரம் பாதிக்கப்பட்டது. 
மூலனூர்
மூலனூர், கன்னிவாடி, கிளாங்குண்டல், கரையூர்,  எரிசனம்பாளையம், கோட்டைமருதூர் பகுதியில் பலத்த மழை பெய்தது. இதன் காரணமாக அந்த பகுதி குளங்களுக்கு தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது. மூலனூர் மாதிரி பள்ளி பகுதியில் மரம் வேரோடு சாய்ந்தது.

மேலும் செய்திகள்