வேலூர் மாநகராட்சி பகுதியில் அனுமதி இன்றி வைக்கப்பட்ட பேனர்கள் அகற்றம்

அனுமதி இன்றி வைக்கப்பட்ட பேனர்கள் அகற்றம்;

Update: 2021-10-31 16:50 GMT
வேலூர்

வேலூர் மாநகராட்சி பகுதியில் அனுமதியின்றி திருமண வரவேற்பு நிகழ்ச்சி, பிறந்தநாள் விழா, கண்ணீர் அஞ்சலி, கட்சி நிகழ்ச்சிகளுக்காக பேனர்கள் வைக்கப்பட்டுள்ளதாக, கலெக்டர் குமாரவேல் பாண்டியனுக்கு புகார்கள் சென்றன. இதையடுத்து அனுமதியின்றி வைக்கப்பட்டுள்ள அனைத்துப் பேனர்களையும் உடனடியாக அகற்றும்படி மாநகராட்சி அதிகாரிகளுக்கு கலெக்டர் உத்தரவிட்டார்.

அதைத்தொடர்ந்து வேலூர் மாநகராட்சி பகுதிகளில் அனுமதியின்றி வைக்கப்பட்ட பேனர்களை அகற்றும் பணியில் மாநகராட்சி அலுவலர்கள், தூய்மைப் பணியாளர்கள் ஈடுபட்டனர். 4 மண்டலங்களிலும் 10-க்கும் மேற்பட்ட பேனர்கள் அகற்றப்பட்டன. அனுமதி பெறாமல் பேனர்கள் வைக்கும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும், என அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்தனர்.

மேலும் செய்திகள்