மயானத்தில் புதர்கள் ஆக்கிரமிப்பு
கோத்தகிரி கடைவீதி அருகே பொது மயானம் உள்ளது. இந்த மயானம் முழுவதும் புதர் செடிகள் அடர்ந்து வளர்ந்து உள்ளது டன், நடைபாதைகள் பழுதடைந்து குண்டும் குழியுமாக காணப் படுகிறது. மேலும் இங்கு பொருத்தப்பட்டுள்ள மின் விளக்கு களும் பழுதடைந்து எரியாமல் உள்ளன. இதனால் இறந்தவர் களின் உடலை அடக்கம் செய்ய சுமந்து வருபவர்கள் அவதிய டைந்து வருகிறார்கள். எனவே புதர்களை அகற்ற வேண்டும்.
ஆனந்தராஜ், கோத்தகிரி. |
பழுதான தெருவிளக்குகள்
கோத்தகிரி தங்கமலை 19-வது வார்டு பகுதியில் தெருவிளக்கு கள் பழுதடைந்து பல நாட்கள் ஆகியும் அதை சரிசெய்ய வில்லை. இங்கு வனவிலங்குகள் நடமாட்டம் இருப்பதால், இரவு நேரத்தில் இருள் சூழ்ந்து இருப்பதால் இரவில வெளியே செல்ல அச்சமாக இருக்கிறது. எனவே அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து பழுதான தெருவிளக்கை சரிசெய்ய வேண்டும். |
பவுல், கோத்தகிரி. |
தேங்கி கிடக்கும் குப்பைகள்
பொள்ளாச்சி பாலக்காடு ரோடு ஜமீன் முத்தூரில் ரோட்டில் குப்பைகள் தேங்கி கிடக்கின்றன. இதனால் கடும் துர்நாற்றம் வீசுகிறது. தற்போது மழை பெய்து வருவதால் கொசுக்கள் உற்பத்தியாகி நோய் பரவும் அபாயம் ஏற்பட்டு உள்ளது. எனவே குப்பைகளை அகற்ற வேண்டும். |
சிவா, பொள்ளாச்சி |
ஆபத்தான குழி
பொள்ளாச்சி பாலக்காடு ரோடு வடுகபாளையம் பிரிவு ரெயில்வே மேம்பாலம் கட்டுமான பணிகள் நடைபெற்று வருகிறது. பாலத்தின் கீழ் பகுதியில் சர்வீஸ் ரோடு அமைக்கும் இடத்தில் பாதாள சாக்கடை திட்ட பணிகளுக்காக அமைக்கப் பட்ட ஆள் இறங்கு குழிகள் மூடப்படாமல் உள்ளது. தற்போது மழைநீர் அங்கு தேங்கி இருப்பதால் குழிகள் இருப்பது தெரிய வில்லை. எனவே விபத்துகள் ஏற்படும் முன்பு தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். |
காளிமுத்து, பொள்ளாச்சி |
சாலை சீரமைக்கப்படுமா?
கோவையின் மைய பகுதியான ரேஸ்கோர்சில் உள்ள சாலையை சீரமைக்க நிதி ஒதுக்கப்பட்டது. இதையடுத்து மேற்கு மண்டல போலீஸ் ஐ.ஜி. அலுவலகம் தொடங்கி சிறிது தூரத்திற்கு சாலை பெயர்த்தெடுக்கப்பட்டது. ஆனால் பல நாட்கள் ஆகியும் சாலை சீரமைக்கப்படவில்லை. இதனால் இந்த வழியாக செல்பவர்கள் அவதியடைந்து வருகிறார்கள். எனவே இந்த சாலையை சீரமைக்க வேண்டும். |
சொர்ணா, புலியகுளம். |
சாலையில் செல்லும் கழிவுநீர்
கோவை மாநகராட்சி 19-வது வார்டு வீரகேரளம், பொங் காளியூர், அண்ணாநகர் பகுதியில் சாக்கடை கால்வாய் வசதி இல்லை. இதனால் சாக்கடை கழிவுநீர் சாலையில் செல்கிறது. இது குறித்து பலமுறை அதிகாரிகளிடம் மனு கொடுத்தும் நடவடிக்கை இல்லை. எனவே அதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும். |
சூர்யா, கோவை. |
ஆபத்தான மின்கம்பம்
கோவை ரத்தினபுரி நேரு வீதியில் சாலை ஓரத்தில் ஒரு மின்கம்பம் உள்ளது. இந்த கம்பத்தின் அடிப்பகுதியில் காரைகள் பெயர்ந்து கம்பிகள் வெளியே தெரிகிறது. இதனால் எந்த நேரத்திலும் கீழே விழுந்து விபத்து ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே ஆபத்தான இந்த மின்கம்பத்தை உடனடியாக மாற்ற வேண்டும். |
மகேசன், ரத்தினபுரி. |
குப்பை தொட்டி வேண்டும்
கோவை ராமநாதபுரம் 80 அடி ரோட்டில் உள்ள சர்ச் ரோடு அருகே குப்பை தொட்டி இருந்தது. தற்போது அதை காண வில்லை. இதனால் அங்கு குப்பைகள் குவிந்து கிடக்கிறது. மேலும் அங்கு தெருநாய்கள் குவிந்து குப்பைகளை சாலையில் கொண்டு வந்து போடுகிறது. இதனால் சாலையில் செல்பவர்கள் விபத்தில் சிக்கி காயத்துடன் தப்பிச்செல்லும் நிலை ஏற்பட்டு வருகிறது. எனவே அங்கு குப்பை தொட்டி வைக்க வேண்டும். |
மூர்த்தி, ராமநாதபுரம். |
கூடுதல் கட்டணம் வசூல்
கோவை காந்திபுரம் டவுன் பஸ் நிலையம் மேற்கு நுழைவு வாயில் அருகே கட்டண கழிப்பறை உள்ளது. இங்கு கூடுதல் கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து கேட்டால் சரியான பதிலை சொல்வது இல்லை. எனவே அதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுத்து கூடுதல் கட்டணம் வசூப்பதை தடுக்க வேண்டும். |
கீர்த்திபிரியன், துடியலூர். |
சாலையில் குழி
கோவை-சத்தி ரோட்டில் அத்திபாளையம் பிரிவு சிக்னல் அருகே நடுரோட்டில் 2 இடங்களில் குழி உள்ளது. இதனால் இந்த வழியாக இருசக்கர வாகனங்களில் செல்பவர்கள் சிரமம் அடைந்து வருகிறார்கள். அத்துடன் அடிக்கடி விபத்துகளும் ஏற்பட்டு வருகிறது. எனவே அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து குழியை மூட வேண்டும். |
கந்தன், கணபதி. |
குவிந்துள்ள குப்பைகள்
கோவை சாய்பாபாகாலனி ஏ.கே.நகரில் குப்பைகள் சரியாக சுத்தம் செய்யப்படவில்லை. இதனால் அங்கு மலை போன்று குவிந்து கிடக்கிறது. தற்போது மழை பெய்து வருவதால், குப்பையில் தண்ணீர் தேங்கி அந்த வழியாக செல்ல முடியாத அளவுக்கு துர்நாற்றம் வீசி வருகிறது. எனவே சுகாதார சீர்கேடு ஏற்படுவதற்கு முன்பு குப்பைகளை சுத்தம் செய்ய வேண்டும். |
ராஜசேகரன், சாய்பாபாகாலனி. |
மேம்பாலத்தில் விளக்குகள் ஒளிருமா?
கோவை காந்திபுரம் மேம்பாலத்தில் மின்விளக்குகள் பொருத்தப்பட்டு உள்ளன. அதில் பல விளக்குகள் ஒளிராமல் உள்ளது. இதனால் இரவு நேரத்தில் அந்த வழியாக வாகனங்களில் செல்பவர்கள் அவதியடைந்து வருகிறார்கள். எனவே விபத்துகள் ஏற்படுவதற்கு முன்பு பழுதான விளக்குகளை சரிசெய்து ஒளிர வைக்க வேண்டும். |
மோசஸ், காந்திபுரம். |