பெரியகுளம் அருகே சிறுத்தைப்புலியை பிடிக்க கூண்டுகள்
பெரியகுளம் அருகே சிறுத்தைப்புலியை பிடிக்க வனப்பகுதியில் கூண்டுகள் வைக்கப்பட்டு உள்ளது.
பெரியகுளம்:
பெரியகுளம் அருகே ஈஞ்சமலை வனப்பகுதியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு பண்டாரம் என்பவரது மாட்டை சிறுத்தைப்புலி அடித்துக்கொன்றது. அதே போன்று வேங்கைபுலி என்பவரது ஆட்டை சிறுத்தைப்புலி கொன்றது.
இதைத்தொடர்ந்து வனத்துறையினர் அந்த பகுதியில் சோதனை நடத்தி சிறுத்தைப்புலி நடமாட்டம் இருப்பதை உறுதி செய்தனர். அதையொட்டி வனப்பகுதியில் 10 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு உள்ளது. 15 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டு, அவர்கள் சிறுத்தைப்புலி நடமாட்டத்தை கண்காணித்து வருகின்றனர். மேலும் சிறுத்தையை பிடிக்க அங்கு 2 கூண்டுகள் வைக்கப்பட்டுள்ளது.