ஊட்டி
மஞ்சூர் அருகே எமரால்டு அணையை சுற்றி அடர்ந்த வனப்பகுதிகள் உள்ளன. இங்கு புலி, சிறுத்தை உள்ளிட்ட வனவிலங்குகள் வாழ்ந்து வருகின்றன. அணைக்கு செல்லும் வழியில் மின்வாரிய குடியிருப்புகள் உள்ளது. இந்தநிலையில் எமரால்டு பஜாரை சேர்ந்த கார்த்தி என்பவரது பசுமாடு மின்வாரிய குடியிருப்பில் நீர்தேக்க தொட்டி அருகே மேய்ச்சலில் ஈடுபட்டு இருந்தது.
அப்போது வனப்பகுதியில் இருந்து வந்த புலி ஒன்று பசு மாட்டை அடித்து கொன்றது. பின்னர் வனப்பகுதிக்குள் சென்றது. கடந்த ஒரு மாதத்தில் 3 மாடுகளை புலி அடித்து உள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர். புலி நடமாட்டம் காரணமாக பொதுமக்கள் அச்சமடைந்து உள்ளனர். இதுகுறித்து தகவலறிந்த வனத்துறையினர் புலி நடமாட்டத்தை கண்காணிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.