தூத்துக்குடி மாவட்டத்தில் 3 பேர் குண்டர் சட்டத்தில் கைது

தூத்துக்குடி மாவட்டத்தில் 3 பேர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டனர்;

Update: 2021-10-31 12:13 GMT
தூத்துக்குடி:
தூத்துக்குடி மாவட்டத்தில் கஞ்சா கடத்தியவர் உள்பட 3 பேர் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டனர்.
கஞ்சா கடத்தல்
தூத்துக்குடி மாவட்டம் ஆழ்வார்திருநகரி அருகே உள்ள கேம்பலபாத் பகுதியில், ஸ்ரீவைகுண்டம் கீழகோட்டை வாசல் தெருவை சேர்ந்த மந்திரமூர்த்தி மகன் சங்கரன் என்ற சங்கரசுப்பு (26) என்பவர் காரில் கஞ்சா கடத்தி சென்ற போது ஆழ்வார்திருநகரி போலீசாரால் கைது செய்யப்பட்டார். இதே போன்று எப்போதும்வென்றான் சிவஞானபுரம் தெற்கு தெருவை சேர்ந்த சர்க்கரை மகன் அறிவழகன் (46) என்பவரை தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பதுக்கி வைத்து இருந்ததாக எப்போதும் வென்றான் போலீசார் கைது செய்தனர். ஸ்ரீவைகுண்டம் கொங்கராயகுறிச்சி பகுதியை சேர்ந்த காந்தி மகன் முத்துகுமார் (39) என்பவரை தங்கசங்கிலி பறிப்பு வழக்கில் ஓட்டப்பிடாரம் போலீசார் கைது செய்தனர்.
குண்டர் சட்டம்
இவர்கள் 3 பேர் மீதும் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் பரிந்துரை செய்தார். அதன்பேரில் மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ், சங்கரன் என்ற சங்கரசுப்பு, அறிவழகன், முத்துகுமார் ஆகிய 3 பேரையும் கைது செய்ய உத்தரவிட்டார். இந்த உத்தரவு நகலை சம்பந்தப்பட்ட போலீசார் பாளையங்கோட்டை ஜெயிலில் வழங்கினர். இதன் மூலம் தூத்துக்குடி மாவட்டத்தில் இதுவரை 166 பேர் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு உள்ளனர்.

மேலும் செய்திகள்