சென்னை விமான நிலையத்தில் ரூ.27 லட்சம் தங்கம் பறிமுதல்

சாா்ஜாவில் இருந்து உள்ளாடையில் மறைத்து வைத்து சென்னை விமான நிலையத்துக்கு கடத்தி வந்த ரூ.27 லட்சம் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.

Update: 2021-10-31 03:24 GMT
சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்துக்கு சாா்ஜாவில் இருந்து விமானம் வந்தது. அதில் வந்த பயணிகளை விமான நிலைய சுங்க இலாகா அதிகாரிகள் தீவிரமாக கண்காணித்தனர். அப்போது 31 வயது மதிக்கத்தக்க வாலிபர் மீது சந்தேகம் அடைந்த சுங்க இலாகா அதிகாரிகள், அவரை நிறுத்தி விசாரித்தனர். அதிகாரிகளிடம் அவர் முன்னுக்கு பின் முரணாக பேசினார். அவரது உடமைகளை சோதனை செய்தனர். அதில் எதுவும் இல்லை. பின்னர் அவரை தனி அறைக்கு அழைத்துச்சென்று சோதனை செய்தனா்.

அதில் அவர், உள்ளாடைகளுக்குள் 4 பாா்சல்கள் மறைத்து வைத்து இருப்பது தெரிந்தது. அவற்றை பிரித்து பார்த்தபோது அதில் தங்க கட்டிகள் இருந்தன. அவரிடம் இருந்து ரூ.27 லட்சத்து 31 ஆயிரம் மதிப்புள்ள 555 கிராம் தங்கத்தை பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக வாலிபரை கைது செய்த சுங்க இலாகா அதிகாரிகள், அந்த தங்கத்தை சார்ஜாவில் இருந்து யாருக்காக கடத்தி வந்தார்? என விசாரித்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்