புல்தானாவில் வங்கியில் ரூ.20 லட்சம் கொள்ளை

புல்தானாவில் பாரத ஸ்டேட் வங்கியில் ரூ.20 லட்சத்தை கொள்ளையடித்து சென்ற ஆசாமிகளை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

Update: 2021-10-31 02:35 GMT
கோப்பு படம்
மும்பை,
புல்தானாவில் பாரத ஸ்டேட் வங்கியில் ரூ.20 லட்சத்தை கொள்ளையடித்து சென்ற ஆசாமிகளை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
வங்கி கொள்ளை
புல்தானா மாவட்டம் சிக்லி தாலுகா கேல்வட் பகுதியில் பாரத ஸ்டேட் வங்கியின் கிளை உள்ளது. நேற்று காலை வங்கியின் பின்பக்க ஜன்னல் உடைந்து இருந்தது. இதை பார்த்த அந்த பகுதி மக்கள் வங்கி மற்றும் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். 
இதையடுத்து போலீசார் அங்கு விரைந்து சென்றனர். விசாரணையில், கொள்ளையர்கள் வங்கி ஜன்னல் கம்பிகளை அறுத்து உள்ளே புகுந்து, வங்கியில் இருந்த ரூ.20 லட்சத்தை கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது.
வலைவீச்சு 
இதையடுத்து போலீசார் கொள்ளையர்களை பிடிக்க வங்கியின் கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்தனர். கொள்ளை சம்பவம் நேற்று முன்தினம் நள்ளிரவு நடந்து இருப்பது தெரியவந்தது. சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், கொள்ளையர்களை வலைவீசி தேடி வருகின்றனர். 
பாரத ஸ்டேட் வங்கியில் ரூ.20 லட்சம் கொள்ளை போன சம்பவம் அந்த பகுதி மக்கள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்