சிறுமிக்கு பாலியல் தொல்லை: 77 வயது முதியவர் கைது

சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த 77 வயது முதியவர் கைது செய்யப்பட்டார்.;

Update: 2021-10-30 20:49 GMT
ஆத்தூர்:
ஆத்தூர் அருகே உள்ள தம்மம்பட்டி  பகுதியை சேர்ந்தவர் ராமசாமி (வயது 77). இவரது முதல் மனைவி இறந்து விட்டதால், 2-வதாக ஒரு பெண்ணை திருமணம் செய்து கொண்டு, அவருடன் குடும்பம் நடத்தி வருகிறார். இந்த நிலையில், அதே பகுதியை சேர்ந்த 11 வயது சிறுமிக்கு மிட்டாய் வாங்கி தருவதாக கூறி அழைத்து சென்று, ராமசாமி பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. இதனை அந்த சிறுமி தனது தாயாரிடம் தெரிவித்தார். 
இது குறித்து அந்த சிறுமியின் தாயார் ஆத்தூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் தமிழரசி மற்றும் போலீசார் போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து ராமசாமியை கைது செய்தனர்.

மேலும் செய்திகள்