மேடை போலீஸ் நிலையத்தில் டி.ஜி.பி. விஸ்வநாதன் ஆய்வு

பாளையங்கோட்டை மேடை போலீஸ் நிலையத்தில் டி.ஜி.பி. விஸ்வநாதன் நேற்று ஆய்வு செய்தார்.

Update: 2021-10-30 20:47 GMT
நெல்லை:
பாளையங்கோட்டை மேடை போலீஸ் நிலையத்தில் டி.ஜி.பி. விஸ்வநாதன் நேற்று ஆய்வு செய்தார்.

டி.ஜி.பி. ஆய்வு

தமிழ்நாடு போலீஸ் வீட்டு வசதிக்கழக டி.ஜி.பி.யான ஏ.கே.விஸ்வநாதன் நேற்று நெல்லை மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்திற்கு வந்தார். அவரை போலீஸ் கமிஷனர் செந்தாமரைக்கண்ணன், நெல்லை சரக டி.ஐ.ஜி., பிரவீன்குமார் அபிநபு, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுகள் மணிவண்ணன் (நெல்லை), கிருஷ்ணராஜ் (தென்காசி), மாநகர துணைபோலீஸ் கமிஷனர் சுரேஷ்குமார் ஆகியோர் வரவேற்றனர். இதைத்தொடர்ந்து போலீஸ் அதிகாரிகளுடன் டி.ஜி.பி., ஆலோசனை நடத்தினார்.
பின்னர் பாளையங்கோட்டை ஐகிரவுண்டில் கட்டப்பட்டு வரும் போலீஸ் நிலைய கட்டிடங்கள், ஆயுதப்படை மைதானத்தில் கட்டப்பட்டுவரும் போலீஸ் கட்டிடங்கள், பாளையங்கோட்டையில் அமைந்துள்ள பழமைவாய்ந்த மேடை போலீஸ் நிலையம் ஆகியவற்றை பார்வையிட்டார். மேடை போலீஸ் நிலையத்தை புதுப்பிப்பது குறித்து போலீஸ் அதிகாரிகளுடன் டி.ஜி.பி., விஸ்வநாதன் ஆலோசனை நடத்தினார்.

ஒத்துழைப்பு அளிக்க வேண்டுகோள்

முன்னதாக மரியாதை நிமித்தமாக டி.ஜி.பி.விஸ்வநாதனை, கலெக்டர்கள் விஷ்ணு (நெல்லை), செந்தில்ராஜ் (தூத்துக்குடி), நெல்லை மாநகராட்சி ஆணையாளர் விஷ்ணுசந்திரன் சந்தித்து ஆலோசனை நடத்தினர். அப்போது போலீஸ் வீட்டு வசதிக்கழகம் மூலம் நடந்துவரும் பணிகளுக்கு ஒத்துழைப்பு அளிக்க கலெக்டர்கள், கமிஷனரிடம் டி.ஜி.பி., கேட்டுக் கொண்டார்.

மேலும் செய்திகள்