தொங்கு பாலத்தை திறந்து வைத்த உதவி கலெக்டர்

காணி இன மக்கள் கட்டிய தொங்கு பாலத்தை உதவி கலெக்டர் திறந்து வைத்தார்.

Update: 2021-10-30 20:35 GMT
விக்கிரமசிங்கபுரம்:
பாபநாசம் மேற்குதொடர்ச்சி மலையில் உள்ள சின்ன மயிலாறு, பெரிய மயிலாறு பகுதியில் வாழும் காணி இன மலைவாழ் மக்களுக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஆற்றின் குறுக்கே மரத்தால் ஆன தொங்கு பாலம் அமைக்க மாவட்ட நிர்வாகத்திடம் கோரிக்கை வைக்கப்பட்டது. அதன்பேரில் விக்கிரமசிங்கபுரம் நகராட்சி சார்பில் அவர்களுக்கு ரூ.22 ஆயிரம் மதிப்புள்ள கயிறு வழங்கப்பட்டது. அதனை கொண்டு அங்கு வாழும் காணி இன மக்கள் அவர்களாகவே மரக்கம்புகளையும், மரக்கட்டைகளை அடுக்கி தொங்கு பாலம் ஒன்று ஆற்றின் குறுக்கே அமைத்துள்ளனர். சுமார் 15 அடி உயரத்துக்கு அமைக்கப்பட்ட இந்த தொங்கு பாலத்தை சேரன்மாதேவி உதவி கலெக்டர் சிவகிருஷ்ணமூர்த்தி நேற்று திறந்து வைத்தார்.
முன்னதாக காணி மழங்குடியின மக்கள் சாதி சான்று பெறுவதற்கான மனுக்களையும் மற்றும் முதியோர் உதவித்தொகை பெறுவதற்கான மனுக்களையும் அவரிடம் வழங்கினர். நிகழ்ச்சியில் அம்பை தாசில்தார் வெற்றிச்செல்வி, மண்டல துணை தாசில்தார் ராஜதுரை, அம்பை வருவாய் ஆய்வாளர் இசக்கி ஆகியோர் கலந்துகொண்டனர்.

மேலும் செய்திகள்