மின்சாரம் தாக்கி வடமாநில தொழிலாளி சாவு

மின்சாரம் தாக்கி வடமாநில தொழிலாளி இறந்தார்.;

Update: 2021-10-30 20:33 GMT
டி.என்.பாளையம்
மின்சாரம்  தாக்கி வடமாநில தொழிலாளி இறந்தார். 
கட்டிட தொழிலாளி
ஒடிசா மாநிலம் சந்தமால் ராக்கீஸ் மாவட்டம் படகடா பகுதியை சேர்ந்தவர் சுனில் (வயது 34). கட்டிட தொழிலாளி. இவர் தனது குடும்பத்தினருடன் பங்களாப்புதூர் அருகே உள்ள அண்ணாநகரில் வசித்து வந்தார்.  இந்த நிலையில் அந்த பகுதியில் நேற்று முன்தினம் சுனில் கட்டிட வேலையில் ஈடுபட்டு கொண்டிருந்தார். அப்போது கட்டிட வேலையில் ஈடுபட்ட அவருைடய உறவினரான சுக்ரிப் நாயக் என்பவர் இரும்பு கம்பியை எடுத்து சுனிலிடம் கொடுத்து உள்ளார். சுனில் அந்த இரும்பு கம்பியை கையில் வாங்கி உள்ளார். 
சாவு
அப்போது இரும்பு கம்பியின் ஒரு முனையானது எதிர்பாராதவிதமாக அருகில் இருந்த மின் கம்பியில் உரசியது.  இதில் சுனிலை மின்சாரம் தாக்கியது. இதனால் அவர் தூக்கி வீசப்பட்டார். உடனே அவரை அங்கிருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக கோபி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள் ஏற்கனவே சுனில் இறந்துவிட்டதாக தெரிவித்தனர். 
இதுகுறித்து பங்களாப்புதூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்