மின்சாரம் தாக்கி வாலிபர் சாவு
நெல்லையில் மின்சாரம் தாக்கி வாலிபர் இறந்தார்.
நெல்லை:
நெல்லை சந்திப்பு பெருமாள் கோவில் தெருவை சேர்ந்தவர் மலை பாண்டி. தி.மு.க. நிர்வாகி. இவரின் மகன் கொம்பையா (வயது 24). இவர் நெல்லை சந்திப்பில் பழம் வியாபாரம் செய்து வந்தார். நேற்று காலையில் தனது வீட்டில் குளித்துவிட்டு ஈர துணியை இரும்பு கொடியில் காய போட்டார். அப்போது எதிர்பாராதவிதமாக மின்சாரம் தாக்கி கொம்பையா உயிரிழந்ததாக கூறப்படுகிறது.
இதுகுறித்து நெல்லை சந்திப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.