லாட்டரி சீட்டுகள் விற்ற 2 பேர் கைது
லாட்டரி சீட்டுகள் விற்ற 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
பாடாலூர்:
பெரம்பலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மணி உத்தரவின்படி பெரம்பலூர் உட்கோட்ட துணை சூப்பிரண்டு சஞ்சீவ்குமார் தலைமையில் பாடாலூர் போலீசார் ஆலத்தூர் தாலுகா செட்டிகுளம் கிராமத்தில் அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்யப்படுகிறதா? என்று சோதனை மேற்கொண்டனர். அப்போது அரணாரை கிராமத்தை சேர்ந்த குணசேகரன்(வயது 57), குரூர் கிராமத்தை சேர்ந்த விஜயகுமார்(61) ஆகியோர் காகிதத்தில் வரிசையாக எண்களை எழுதி வைத்திருந்ததை கண்டு, அவர்களிடம் விசாரித்தனர். இதில் அவர்கள் லாட்டரி சீட்டுகள் விற்றது தெரியவந்தது. இது குறித்து பாடாலூர் போலீசார் வழக்குப்பதிந்து விஜயகுமார், குணசேகரன் ஆகியோரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.