புதிய விளையாட்டுகளுக்கான புத்தாக்க பயிற்சி
பள்ளி உடற்கல்வி ஆசிரியர்களுக்கு புதிய விளையாட்டுகளுக்கான புத்தாக்க பயிற்சி
பெரம்பலூர்:
தமிழ்நாடு பள்ளி கல்வித்துறையில் புதிதாக சேர்க்கப்பட்டுள்ள மல்லர் கம்பம், ரோல்பால், கராத்தே, கிக் பாக்சிங், வில்வித்தை ஆகிய விளையாட்டுகளுக்கு பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளிகளின் உடற்கல்வி ஆசிரியர்களுக்கு 2 நாள் புத்தாக்க பயிற்சி முகாம் நடந்தது. பெரம்பலூர் மாவட்ட விளையாட்டு மைதானத்தில் நடந்த இந்த பயிற்சி முகாமை முதன்மை கல்வி அதிகாரி அறிவழகன் தொடங்கி வைத்தார். இதில் பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள 75 உடற்கல்வி ஆசிரியர்களுக்கு புதிய விளையாட்டுகளுக்கான புத்தாக்க பயிற்சியை பயிற்சியாளர்கள் அளித்தனர். இதற்கான ஏற்பாடுகளை மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் ராஜேந்திரன், தடகள பயிற்சியாளர் கோகிலா ஆகியோர் செய்திருந்தனர்.