தீபாவளியன்று புத்தாடையின்றி கோவணத்துடன் போராட்டம்
தீபாவளியன்று புத்தாடையின்றி கோவணத்துடன் போராட்டம்;
திருச்சி, அக்.31-
தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தின் சார்பாக மாநில தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் திருச்சி-கரூர் பைபாஸ், மலர் சாலையில் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். நேற்று 19-வது நாள் போராட்டத்தில் விவசாயிகள் காதில் பூவை சுற்றி பங்கேற்றனர். பின்னர் அய்யாக்கண்ணு நிருபர்களிடம் கூறும்போது, விவசாயிகளுக்கு 2 மடங்கு லாபகாரமான விலை தருவதாக கூறி 1 கிலோ ரூ.18-க்கு விற்ற நெல்லுக்கு ரூ.36 சேர்த்து ரூ.54 தருகிறேன் என கூறி விட்டு வெறும் ரூ.2 மட்டும் சேர்த்து ரூ.20 கொடுக்கிறார். அதே போல ரூ.2,700-க்கு விற்ற ஒரு டன் கரும்புக்கு ரூ.5,400 சேர்த்து ரூ.8,100 தருகிறேன் என கூறி விட்டு வெறும் ரூ.200 சேர்த்து ஒரு டன் கரும்புக்கு ரூ.2,900 கொடுத்து மோடி அய்யா இந்து விவசாயிகள் காதில் பூ சுற்றி விட்டார். அதற்காக விவசாயிகள் காதில் பூவை சுற்றி கொண்டு போராடி வருகிறோம். மேலும் இந்த தீபாவளியை கொண்டாடும் மனநிலையில் விவசாயிகள் இல்லை. எனவே, தீபாவளியன்று புத்தாடை இன்றி கோவணத்துடன் விவசாயிகள் தங்கள் உண்ணாவிரத போராட்டத்தை நடத்த உள்ளோம் என்றார்.