நாகநல்லூரில் மலைப்பாம்பு பிடிபட்டது

நாகநல்லூரில் மலைப்பாம்பு பிடிபட்டது

Update: 2021-10-30 19:38 GMT
உப்பிலியபுரம், அக்.31-
உப்பிலியபுரம் அருகே உள்ள நாகநல்லூரைச் சேர்ந்தவர் பெருமாள் (வயது 45). இவரது சோளத்தோட்டத்தில் அறுவடை பணி நடைபெற்றது. அப்போது, மலைப்பாம்பு ஒன்று ஊர்ந்து சென்றது. இதனால் அதிர்ச்சி அடைந்த ெதாழிலாளர்கள் அலறி அடித்து ஓடினர். பின்னர் இது குறித்த வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில், துறையூர் வனச்சரகர் பொன்னுசாமி, வனக்காப்பாளர் சுசீலா, விலங்குகள் நல வாரிய தன்னார்வலர் இளங்கோவன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று 12 அடி நீளமுள்ள மலைப்பாம்பை உயிருடன் மீட்டு பச்சைமலை வனப்பகுதியில் விட்டனர்.

மேலும் செய்திகள்