தினத்தந்தி புகார் பெட்டி

'தினத்தந்தி' புகார் பெட்டிக்கு 89398 18888 என்ற 'வாட்ஸ்-அப்' எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள்:-

Update: 2021-10-30 19:33 GMT
அரியலூர்
குளத்தில் இறந்து கிடக்கும் மீன்கள்
பெரம்பலூர் மாவட்டம், குன்னம் வட்டம், மருவத்தூர் கிராமத்தில் உள்ள அம்மன் குளத்தில் மீன்கள் இறந்து மேலே மிதக்கின்றது. இதனால் குளத்தில் துர்நாற்றம் வீசுவதுடன் அப்பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. இதனால் இப்பகுதியில் உள்ள மக்களுக்கு நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 
ராயப்பன், மருவத்தூர், பெரம்பலூர். 

பட்டுப்போன புளியமரம் 
அரியலூர் மாவட்டம், திருமானூர் ஒன்றியம் கீழப்பழுவூர் அருகே உள்ள வட்டார போக்குவரத்து அலுவலக பஸ் நிறுத்தம் அருகில் தஞ்சை-அரியலூர் சாலையோரத்தில் பட்டுப்போன புளியமரம் உள்ளது.  போக்குவரத்து நடைபெறும் போதும், பஸ் நிறுத்தத்தில் பொதுமக்கள் நிற்கும்போதும் இந்த புளியமரம் முறிந்து விழுந்தால் உயிரிழப்பு ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 
பொதுமக்கள், கீழப்பழுவூர், அரியலூர். 

வடிகால் வசதி ஏற்படுத்த வேண்டும்
புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் தாலுகா,  கே.புதுப்பட்டி கொங்கன் தெருவில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் முறையான வடிகால் வசதி இல்லாததால் அப்பகுதியில் உள்ள வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் ஆங்காங்கே தேங்கி நிற்கிறது. மேலும் சாலை வசதி இல்லாததால் மழை பெய்யும்போது வடிகால் வசதி இன்றி மண் சாலையில் மழைநீர் குளம்போல் தேங்கிநிற்கிறது. இதனால் சாலை சேறும் சகதியுமாக காட்சி அளிக்கிறது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 
பொதுமக்கள், கே.புதுப்பட்டி, புதுக்கோட்டை. 

காவிரி குடிநீரை பகலில் திறந்துவிட வேண்டுகோள் 
பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை தாலுகா, மங்களமேடு கிராமத்தில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர்.  இப்பகுதியில் உள்ள வீடுகளில் காவிரி குடிநீர் அதிகாலையில் திறந்து விடப்படுவதால் வயதான தம்பதிகள் அதிகாலையிலேயே எழுந்து  தண்ணீர் பிடிக்க மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர். எனவே  இனி மழைக்காலம் என்பதால் அதிகாலையில் தண்ணீர் திறக்கப்படுவதைத் தவிர்த்து பகலில் காவிரி குடிநீரை திறந்து விட சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 
பொதுமக்கள், மங்களமேடு, பெரம்பலூர். 

கழிவுநீர் வாய்க்காலில் தேங்கும் குப்பைகள் 
திருச்சி தென்னூர் மீன்கார தெருவில் உள்ள கழிவுநீர் வாய்க்காலில் அதிக அளவில் குப்பைகள் கிடப்பதால் கழிவுநீர் செல்ல வழியின்றி தேங்கி நிற்கிறது. இதனால் அப்பகுதியில் துர்நாற்றம் வீசுவதுடன் அவற்றில் இருந்து கொசுக்கள் உற்பத்தியாகி நோய் பரவும் அபாயம் உள்ளது. மேலும் இந்த வாய்க்காலில் மூடி அமைக்கப்படாமல் உள்ளதால் குழந்தைகள் விழுந்து உயிரிழக்கும் அபாயம் உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 
பொதுமக்கள், தென்னூர், திருச்சி. 

வலுவிழந்த நீர்த்தேக்க தொட்டி 
புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி தாலுகா, தென்னகர் அரிசனதெருவில் மேல்நிலை நீா்த்தேக்கத்தொட்டி அமைக்கப்பட்டுள்ளது. இந்த தொட்டி அமைக்கப்பட்டு பல ஆண்டுகள் ஆனதால் தற்போது அதனை தாங்கி நிற்கும் தூண்கள் பழுதடைந்து சிமெண்டு  பூச்சுகள் பெயர்ந்து கீழே விழுந்து வருகிறது. இதனால் இந்த நீர்த்தேக்க தொட்டி எப்போது வேண்டுமானாலும் வலுவிழந்து கீழே விழும் நிலை உள்ளது. பொதுமக்கள் நடமாட்டத்தின்போது இந்த மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி கீழே விழுந்தால் உயிரிழப்பு ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.  
பொதுமக்கள், தென்னகர், புதுக்கோட்டை. 

டெங்கு பரவும் அபாயம்
திருச்சி மாவட்டம், முத்தரசநல்லூர், அய்யப்பா நகரில் உள்ள காலி மனைகளில் மழைநீர் தேங்கி குளம்போல் காட்சி அளிக்கிறது. இதில் கொசுக்கள் உற்பத்தியாகி அப்பகுதியில் டெங்கு காய்ச்சல் பரவும் அபாயம் உள்ளது. மேலும் இந்த மழைநீரில் விஷ ஜந்துக்கள் உலா வருவதினால் இரவு நேரத்தில் இப்பகுதியில் நடந்து செல்பவர்கள் பெரிதும் அச்சத்துடனே சென்று வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 
பொதுமக்கள், முத்தரசநல்லூர், திருச்சி. 

சாலை வசதி ஏற்படுத்தப்படுமா? 
கரூர் மாவட்டம், குளித்தலை வட்டம், தோகைமலை ஒன்றியம் ஆர்.டி.மலை பஞ்சாயத்தை சேர்ந்த அழகாபுரி கிராமத்தில் இருந்து நாக்கர் தோட்டம் வரை கடந்த 20 ஆண்டுகளாக சாலை வசதி இல்லை. இதனால் அப்பகுதி மக்கள், வாகன ஓட்டிகள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து சாலை வசதி ஏற்படுத்த வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 
பொதுமக்கள், அழகாபுரி, கரூர். 

சாலையில்  பள்ளம் 
திருச்சி கலெக்டர் ஆபிஸ் அருகில் ராஜா காலனி  3-வது கிராஸ் 1-வது தெரு சாலையில்  பாதாள சாக்கடை மூடிக்கு அருகில் பள்ளம் உள்ளது. அதில் மழை பெய்யும் போது தண்ணீர் உள்ளே செல்கிறது. அதனால் மேலும் பள்ளம் அதிகமாகி வருகிறது. மழைபெய்யும்போது இதில் வாகனங்கள் சிக்கி விபத்து ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 
பொதுமக்கள், ராஜா காலனி, திருச்சி. 

திறந்திருக்கும் பாதாள சாக்கடை 
திருச்சி 11-வது வார்டு சறுக்கு பாறை மாநகராட்சி நவீன கழிப்பிடம், அங்கன்வாடி பள்ளி எதிரில் சாலையின்  நடுவில் சாக்கடை மேல்  மூடி இல்லாமல் திறந்த பள்ளமாக உள்ளது. இதனால் இரவு நேரத்தில் மோட்டார் சைக்கிளில் வருபவர்களும், நடந்து செல்பவர்களும்  இந்த பள்ளத்தில் தவறி விழுந்து காயம் அடைகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேம். 
சுவாமிநாதன், திருச்சி. 

பயன்பாட்டிற்கு வராத நீர்த்தேக்க தொட்டி
திருச்சி மாவட்டம், மணப்பாறை பெஸ்டோ நகரில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். அவர்களின் குடிநீர் தேவைக்காக அப்பகுதியில் நீர்த்தேக்க தொட்டி புதிதாக கட்டப்பட்டது. இந்த குடிநீர் தொட்டி அமைக்கப்பட்டு 6 மாதங்கள் ஆகியும் இன்னும் பயன்பாட்டிறக்கு வராமல் உள்ளது. மேலும் இப்பகுதியில் சாலை வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இன்றி இப்பகுதி மக்கள் பெரிதும் அசதிப்பட்டு வருகின்றனர்.  எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 
பொதுமக்கள், பெஸ்டோநகர், திருச்சி. 

வீடுகளின் வாசல்களில் செல்லும் கழிவுநீர்
திருச்சி வடக்கு தாராநல்லூா் மாணிக்கம் பிள்ளை தோப்பு தெருவில் அமைக்கப்பட்டுள்ள கழிவுநீர் சாக்கடையில் அடைப்பு ஏற்பட்டு கழிவுநீர் வழிந்து வீடுகளின் வாசல்களில் செல்கிறது. இப்பகுதியில் துப்பரவு பணியாளர்கள் குப்பைகளை தூர்வார வருவது இல்லை. இதனால் அப்பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்படுவதுடன்  கொசுத்தொல்லை அதிகரிக்க அதிக வாய்ப்பு உள்ளது. இதனால் டெங்கு, மலேரியா உள்ளிட்ட காய்ச்சல் பரவவும்  வாய்ப்பு உள்ளது. குழந்தைகள் அதிகம் உள்ள இப்பகுதியை சம்பந்தப்பட்ட  அதிகாரிகள் கருத்தில்கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.
பொதுமக்கள், வடக்கு தாராநல்லூா், திருச்சி. 

சாலையில்  பள்ளம் 
திருச்சி கலெக்டர் ஆபிஸ் அருகில் ராஜா காலனி  3-வது கிராஸ் 1-வது தெரு சாலையில்  பாதாள சாக்கடை மூடிக்கு அருகில் பள்ளம் உள்ளது. அதில் மழை பெய்யும் போது தண்ணீர் உள்ளே செல்கிறது. அதனால் மேலும் பள்ளம் அதிகமாகி வருகிறது. மழைபெய்யும்போது இதில் வாகனங்கள் சிக்கி விபத்து ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 
பொதுமக்கள், ராஜா காலனி, திருச்சி. 

உயிர்பலி வாங்க காத்திருக்கும் மின்கம்கம் 
திருச்சி ஏர்போர்ட் ஒயர்லஸ் சாலையோரத்தில் அமைக்கப்பட்டுள்ள மின்கம்பம் பழுதடைந்து சிமெண்டு பூச்சுகள் பெயர்ந்து கீழே விழுந்து எலும்பு கூடுபோல் காட்சி அளிக்கிறது. இந்த மின்கம்பம் எப்போது வேண்டுமானாலும் விழும் நிலையில் உள்ளது. தற்போது மழைகாலம் என்பதால் பொதுமக்கள் நடமாட்டத்தின்போது இந்த மின்கம்கம் முறிந்து கீழே விழுந்தால் உயிரிழப்பு ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 
பொதுமக்கள், ஏர்போர்ட், திருச்சி. 

சுகாதாரமற்ற அரசு மருத்துவமனை கழிவறை 
திருச்சி மாவட்டம், மணப்பாறை அரசு மருத்துவமனையில் உள்ள பிரசவ வார்டு கழிவறை சுகாதாரமற்ற நிலையில் உள்ளது. மேலும் கழிவறையில் அடிக்கடி தண்ணீர் வருவது இல்லை. அப்படி வந்தாலும் அதில் கழிவுநீர் கலந்து வருகிறது. இதனால் கர்ப்பிணிகள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 
ஜெயக்குமார், மலைத்தாதம்பட்டி, திருச்சி. 

மேலும் செய்திகள்