அடிப்படை வசதிகள் செய்து தர கோரிக்கை

மருளூத்து கிராமத்தில் அடிப்படை வசதிகள் செய்து தர வேண்டும் என பொதுமக்கள் ேகாரிக்கை விடுத்துள்ளனர்.

Update: 2021-10-30 19:32 GMT
விருதுநகர், 
விருதுநகர் அருகே உள்ள மருளூத்து கிராமத்தில் அருந்ததியர் சமுதாயத்தை சேர்ந்த 60 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இப் பகுதியில் அடிப்படை வசதிகள் ஏதும் இல்லாத நிலையில் கழிவுநீர் குடியிருப்பு  பகுதியில் தேங்கி சுகாதார சீர்கேட்டை ஏற்படுத்தி வருகிறது. இதனால் பள்ளி குழந்தைகள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். மேலும் அப்பகுதியில் குடிநீர் தொட்டி மூடப்படாமல் உள்ளதால் அப்பகுதி மக்கள் தங்களுக்கு வினியோகிக்கப்படும் குடிநீரை பயன்படுத்த அஞ்சும் நிலை உள்ளது. எனவே மாவட்ட நிர்வாகம் இது குறித்து ஆய்வு செய்து மருளூத்து கிராமத்தில் அருந்ததியர் சமுதாயத்தினர் வசிக்கும் பகுதியில் அடிப்படை வசதிகள் செய்து தர வேண்டும் என மாவட்ட நிர்வாகத்திடம் அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்