ஓடுதள பணி சீரமைப்பு பணி நிறைவு; நாளை முதல் 24 மணி நேர விமான சேவை
திருச்சி விமான நிலையத்தில் ஓடுதள சீரமைப்பு பணி நிறைவுபெற்றது. இதைத்தொடர்ந்து நாளை முதல் 24 மணி நேர விமான சேவை தொடங்குகிறது.
செம்பட்டு, அக்.31-
திருச்சி விமான நிலையத்தில் ஓடுதள சீரமைப்பு பணி நிறைவுபெற்றது. இதைத்தொடர்ந்து நாளை முதல் 24 மணி நேர விமான சேவை தொடங்குகிறது.
விமான முனையம்
திருச்சி விமான நிலையம் வளர்ந்துவரும் விமான நிலையங்களில் முன்னணியில் உள்ளது. இங்கு ரூ.950 கோடியில் புதிய விமான முனையம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்த பணிகள் நிறைவுபெறும் தருவாயில் உள்ளது.
இதேபோல் கடந்த 18 மாதங்களாக ஓடுதளம் சீரமைக்கும் பணியும் நடைபெற்று வந்தது. இந்த ஓடுதள சீரமைப்பு பணியானது கடந்த 2020-ம் ஆண்டு ஜூலை மாதம் தொடங்கப்பட்டு நடைபெற்று வந்தது. இதனால் விமானங்கள் இரவு நேரங்களில் பணி நடைபெறும் போது பகல் நேரங்களிலும், பகல் நேரங்களில் பணி நடைபெறும் போது இரவு நேரங்களிலும் விமான சேவைகள் இயக்கப்பட்டு வந்தது.
நாளை முதல்...
இதனால் குறிப்பிட்ட நேரங்களில் மட்டுமே விமானங்கள் திருச்சி விமான நிலையத்துக்கு வந்து சென்றன. இந்த நிலையில் ஓடுதள சீரமைப்பு நிறைவு பெற்றுள்ளது. இதனால் நாளை (திங்கட்கிழமை) முதல் 24 மணி நேரமும் விமானங்கள் வந்து செல்வதற்கான வகையில் பயன்பாட்டிற்கு வர இருக்கின்றது. இதனால் வெளிநாடுகளில் இருந்து வரும் விமானங்கள் 24 மணி நேரமும் இயக்கும் நிலை தொடர இருப்பதாக விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர். இதன் மூலம் விமான சேவைகள் அதிகரிக்கும் வாய்ப்புகள் உள்ளன.