விருதுநகர் மாணவர் தங்கம் வென்றார்

மாநில அளவிலான வில்வித்தை போட்டியில் விருதுநகர் மாணவர் தங்கம் வென்றார்.

Update: 2021-10-30 19:19 GMT
விருதுநகர், 
தமிழக வில்வித்தை சங்கத்தின் சார்பில் மாநில அளவிலான வில்வித்தை போட்டி சென்னையில் நடைபெற்றது. இதில் சப்-ஜூனியர் பிரிவில் விருதுநகர் மாணவர் வேதாந்த் கலந்து கொண்டு தனிநபர் பிரிவில் தங்கப்பதக்கமும், கலப்பு இரட்டையர் பிரிவில் வெண்கலப்பதக்கமும் வென்றார். இவர் ஏற்கனவே தேசிய அளவிலான வில்வித்தை போட்டியில் கலந்து கொண்டு தங்கப்பதக்கம் வென்றது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்