கார் கவிழ்ந்து விபத்து
காரியாபட்டி அருகே கார் கவிழ்ந்து விபத்துக்கு உள்ளானது.
காரியாபட்டி,
ராமநாதபுரம் பட்டிணம்காத்தான் பகுதியை சேர்ந்த சரவணன் (வயது 39) என்பவர் குடும்பத்துடன் சிவகாசிக்கு தீபாவளிக்கு பட்டாசு வாங்க காரில் சென்று கொண்டு இருந்தார். அப்போது நரிக்குடி அருகே மறையூர் கிருதுமால் ஆற்றின் குறுக்கே உள்ள மேம்பால வளைவில் கார் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் காைர ஓட்டிச்சென்ற சரவணன், அவரது மனைவி சசிகலா மற்றும் 2 குழந்தைகள் காயமின்றி அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினர்.