அனுமதியின்றி பட்டாசு வைத்திருந்த 5 பேர் மீது வழக்கு

அனுமதியின்றி பட்டாசு வைத்திருந்த 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.;

Update: 2021-10-30 19:12 GMT
குளித்தலை, 
குளித்தலை, கோட்டமேடு, அய்யர்மலை, நச்சலூர், நெய்தலூர் காலனி ஆகிய பகுதிகளில் அரசு அனுமதியின்றி வெடிக்கக்கூடிய பட்டாசுகளை சிலர் தீபாவளிக்கு விற்பனை செய்வதற்காக வைத்திருப்பதாக குளித்தலை போலீசாருக்கு புகார் வந்தது.
இதையடுத்து அந்த பகுதிகளுக்கு சென்ற போலீசார் அனுமதியின்றி பட்டாசுகளை வைத்திருந்த 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்தனர். மேலும் அவர்களிடமிருந்த பட்டாசுகளும் பறிமுதல் செய்யப்பட்டது.

மேலும் செய்திகள்