மின்னல் தாக்கி தொழிலாளி பலி
திருப்பத்தூர் அருகே மின்னல் தாக்கி தொழிலாளி பலியானார்.
திருப்பத்தூர்,
திருப்பத்தூர் சுற்றிலும் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. இதில் நேற்று மதியம் இடியுடன் கூடிய பலத்த மழை பெய்தது. இதில் திருப்பத்தூர் அருகே ஓவலிப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த தொழிலாளியான மகாலிங்கம் (வயது 50) என்பவர் ஓவலிகண்மாய் அருகே மாடுகள் மேய்த்து கொண்டிருந்தார். அப்போது அப்பகுதியில் திடீரென மின்னல் தாக்கியதில் மகாலிங்கம் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து நெற்குப்பை ேபாலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். திருப்பத்தூர் வட்டாட்சியர் பஞ்சாபிகேசன் விசாரணை நடத்தினார். இதேபோல் மகிபாலன்பட்டி கிராமத்தில் மின்னல் தாக்கியதில் காளைமாடு ஒன்று பலியானது.