1 முதல் 8-ம் வகுப்பு மாணவர்களுக்காக நாளை முதல் பள்ளிகள் திறப்பு

விழுப்புரம் மாவட்டத்தில் 1 முதல் 8-ம் வகுப்பு வரையுள்ள மாணவர்களுக்காக நாளை முதல் பள்ளிகள் திறக்கப்படுகின்றன. இதையொட்டி அனைத்து பள்ளிகளையும் சுத்தம் செய்யும் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.;

Update: 2021-10-30 17:51 GMT
விழுப்புரம், 

விழுப்புரம் மாவட்டத்தில் 1 முதல் 8-ம் வகுப்பு வரையுள்ள மாணவ- மாணவிகளுக்காக 1,145 தொடக்கப்பள்ளிகள், 267 நடுநிலைப்பள்ளிகள், 187 உயர்நிலைப்பள்ளிகள், 205 மேல்நிலைப்பள்ளிகள் என மொத்தம் 1,804 பள்ளிகள் கொரோனா பாதுகாப்பு வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி திறக்கப்பட உள்ளன.
இதையொட்டி அனைத்து வகை பள்ளிகளின் வளாகம், வகுப்பறைகள், ஆசிரியர் அறைகள், குடிநீர் தொட்டி, கழிவறைகள் அனைத்தும் தூய்மை பணியாளர்களை கொண்டும், நூறு நாள் வேலை திட்டத்தில் பணிபுரியும் பணியாளர்களை கொண்டும், நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சி பணியாளர்களை கொண்டும் சுத்தம் செய்யப்பட்டு வருகிறது. 

வரவேற்க ஏற்பாடு 

மேலும் அனைத்து பள்ளிகளிலும் மாணவ- மாணவிகளின் சுகாதாரம் மற்றும் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில் அவர்களின் பயன்பாட்டுக்காக முக கவசம், சானிடைசர், கை கழுவுவதற்கு சோப்பு ஆகியவை வாங்கப்பட்டு தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.
இதனிடையே மிக நீண்ட நாட்களுக்கு பிறகு பள்ளிகள் திறக்கப்படுவதால் பள்ளிக்கு ஆர்வத்துடன் வரும் மாணவ- மாணவிகளை, விருந்தினர்களை வாசலுக்கு வந்து வரவேற்பதைப்போல வரவேற்பு அளித்திட வேண்டும் என்று பள்ளி தலைமை ஆசிரியர்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், பள்ளி மேலாண்மைக்குழு உறுப்பினர்கள், பெற்றோர் ஆசிரியர் கழக நிர்வாகிகள் ஆகியோருக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுரை கூறியுள்ளார். அதன்படி மாணவ- மாணவிகளை வரவேற்கவும் ஏற்பாடுகள் தயார் செய்யப்பட்டு வருகிறது.

மேலும் செய்திகள்