சின்னசேலம் அருகே பஸ் மோதி விவசாயி பலி

சின்னசேலம் அருகே பஸ் மோதி விவசாயி பலி

Update: 2021-10-30 17:37 GMT

சின்னசேலம்

சின்னசேலம் அடுத்த பெருமங்கலம் தெற்கு தெருவை சேர்ந்தவர் வைத்திலிங்கம் (வயது 52). விவசாயியான இவர் நேற்று மதியம் சொந்த வேலை காரணமாக தனது மனைவி அனுராதா(49) என்பவருடன் மொபட்டில் சின்னசேலம் சென்று விட்டு மீண்டும் அங்கிருந்து வீடு நோக்கி வந்துகொண்டிருந்தார். 

நாட்டார்மங்கலம் ஏரி அருகே வந்தபோது எதிரே அம்மகளத்தூரில் இருந்து சின்னசேலம் நோக்கி வந்த அரசு பஸ் மொபட் மீது மோதியதில் வைத்திலிங்கம் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். படுகாயம் அடைந்த அனுராதாவை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக கள்ளக்குறிச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர். இந்த விபத்து குறித்து கீழ்குப்பம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்