மின்சாரம் தாக்கி பசு மாடு சாவு

காயல்பட்டினத்தில் மின்சாரம் தாக்கி பசு மாடு பரிதாபமாக இறந்தது.

Update: 2021-10-30 17:18 GMT
ஆறுமுகநேரி:
காயல்பட்டினம் மற்றும் சுற்று வட்டார பகுதியில் நேற்று முன்தினம் இரவில் பலத்த மழை பெய்தது. அப்போது காயல்பட்டினம் தாயிம் பள்ளிவாசல் கே.டி.எம். தெரு சந்திப்பில் உயர்கோபுர மின்விளக்கு அருகில் தேங்கிய தண்ணீரில் மின்கசிவு இருந்ததாக கூறப்படுகிறது.

அப்போது அங்கு நின்ற பசுமாட்டின் மீது திடீரென்று மின்சாரம் தாக்கியதில் பரிதாபமாக இறந்தது. இதையடுத்து மின்வாரியத்துறையினர் விரைந்து சென்று, மின்கசிவை சரிசெய்தனர்.


மேலும் செய்திகள்