கயத்தாறு உப்பாற்றில் வெள்ளப்பெருக்கு
கயத்தாறு உப்பாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது.
கயத்தாறு:
தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு வட்டார பகுதியில் நேற்று முன்தினம் இரவு பலத்த மழை பெய்தது. இதனால் அங்குள்ள உப்பாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, 10-க்கும் மேற்பட்ட குளங்களுக்கு தண்ணீர் வரத்து அதிகரித்து உள்ளது. இதனால் விவசாயிகள் கார் பருவ நெல் சாகுபடியை தொடங்கி உள்ளனா். மேலும் வெள்ளப்பெருக்கு காரணமாக கயத்தாறு அகிலாண்டேஸ்வரி அம்மன் கோவில் முன்பு உள்ள ராமர் தீர்த்தம் அணை நிரம்பி தண்ணீர் செல்கிறது.
மழை காரணமாக கயத்தாறு அருகே உள்ள புதுக்கோட்டை ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி வளாகத்தில் சுமார் 3 அடி உயரத்திற்கு தண்ணீர் தேங்கியது.