நெல்லிக்குப்பத்தில் மாணவிக்கு வாட்ஸ்-அப்பில் ஆபாச வீடியோ அனுப்பிய மர்மநபர் போலீஸ் விசாரணை

நெல்லிக்குப்பத்தில் மாணவிக்கு வாட்ஸ்-அப்பில் ஆபாச வீடியோ அனுப்பிய மர்மநபர் குறித்து போலீசாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.;

Update:2021-10-30 22:10 IST
நெல்லிக்குப்பம், 

நெல்லிக்குப்பம் அருகே உள்ள வாழப்பட்டு பகுதியை சேர்ந்தவர் 16 வயது மாணவி. இவர் நெல்லிக்குப்பத்தில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-1 படித்து வருகிறார்.

 இந்த நிலையில் கடந்த சில நாட்களாக மாணவியின் வாட்ஸ்-அப் எண்ணிற்கு, மர்மநபர் ஒருவர் ஆபாச வீடியோ மற்றும் புகைப்படங்களை அனுப்பி வந்துள்ளார். மேலும் மாணவியை செல்போனில் அடிக்கடி தொடர்பு கொண்டு தொல்லை கொடுத்துள்ளார்.

இதனால் மனவேதனையடைந்த மாணவி, தனது பெற்றோரிடம் கூறி கதறி அழுதுள்ளார். இதுகுறித்து மாணவியின் தாய், நெல்லிக்குப்பம் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். 

அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, மாணவிக்கு வாட்ஸ்-அப்பில் ஆபாச வீடியோ அனுப்பிய நபர் யார்?, எந்த ஊரைச் சேர்ந்தவர்? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்