நாமக்கல் மாவட்டத்தில் புதிதாக 44 பேருக்கு கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 52,202 ஆக அதிகரிப்பு

நாமக்கல் மாவட்டத்தில் புதிதாக 44 பேருக்கு கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 52,202 ஆக அதிகரிப்பு

Update: 2021-10-30 16:02 GMT
நாமக்கல்:
நாமக்கல் மாவட்டத்தில் நேற்று மேலும் 44 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டதால், இதுவரை பாதிக்கப்பட்ட நபர்களின் எண்ணிக்கை 52,202 ஆக அதிகரித்து உள்ளது.
44 பேருக்கு கொரோனா
நாமக்கல் மாவட்டத்தில் சுகாதாரத்துறை அறிவிப்பின்படி நேற்று முன்தினம் வரை 52 ஆயிரத்து 154 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருந்தனர். இந்த நிலையில் பிற மாவட்டங்களில் சிகிச்சை பெற்று வந்த 4 பேரின் பெயர் நாமக்கல் மாவட்ட பட்டியலுடன் இணைக்கப்பட்டது. இதனால் நாமக்கல் மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 52,158 ஆக அதிகரித்தது.
இதற்கிடையே நேற்று புதிதாக 44 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இதனால் இதுவரை பாதிக்கப்பட்ட நபர்களின் எண்ணிக்கை 52 ஆயிரத்து 202 ஆக அதிகரித்து உள்ளது.
502 பேருக்கு சிகிச்சை
இந்த நிலையில் நேற்று 53 பேர் கொரோனாவில் இருந்து குணமாகி வீடு திரும்பினர். இம்மாவட்டத்தில் இதுவரை 51 ஆயிரத்து 202 பேர் கொரோனாவில் இருந்து குணமாகி வீடு திரும்பி உள்ளனர். 498 பேர் பலியான நிலையில், மீதமுள்ள 502 பேருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
நாமக்கல் மாவட்டத்தில் கொரோனாவின் தாக்கம் மீண்டும் உயர்ந்து வருவதால், பொதுமக்கள் கண்டிப்பாக முக கவசம் அணிய வேண்டும். சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என சுகாதாரத்துறை அதிகாரிகள் வேண்டுகோள் விடுத்து உள்ளனர்.

மேலும் செய்திகள்