நீலகிரியில் புதிதாக 17 பேருக்கு கொரோனா
நீலகிரியில் புதிதாக 17 பேருக்கு கொரோனா
ஊட்டி
நீலகிரி மாவட்டத்தில் நேற்று புதிதாக 17 பேருக்கு கொரோனா உறுதியானது. இதன் மூலம் தொற்று பாதிப்பு எண்ணிக்கை 33 ஆயிரத்து 546 ஆக உயர்ந்து உள்ளது. நேற்று 29 பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பினர்.
இதன் மூலம் இதுவரை 33 ஆயிரத்து 139 பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். தற்போது 197 பேர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். மொத்தமுள்ள 574 ஆக்சிஜன் படுக்கைகளில் 67 படுக்கைகள் நிரம்பி உள்ளது. 507 படுக்கைகள் காலியாக இருக்கிறது.