தேயிலை தோட்ட தொழிலாளர்களுக்கு காவலன் செயலி குறித்து விளக்கம்
தேயிலை தோட்ட தொழிலாளர்களுக்கு காவலன் செயலி குறித்து விளக்கம்
வால்பாறை
வால்பாறை பகுதியில் உள்ள தேயிலை தோட்ட தொழிலாளர்களுக்கும், பள்ளி, கல்லூரியில் படிக்கும் மாணவிகளுக்கும் போலீஸ்சாரால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள பாதுகாப்பு காவலன் செயலி குறித்தும், அதற்கான உதவி மைய இலவச தொலை தொடர்பு சேவை எண் 181 குறித்தும் விளக்கமளிக்கும் விழிப்புணர்வு முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது.
அதன்படி வால்பாறை அருகில் ஸ்டேன்மோர் எஸ்டேட் பகுதியில் உள்ள தேயிலை தோட்ட தொழிலாளர்களுக்கு அவர்கள் பணிபுரியக்கூடிய தேயிலை தோட்ட பகுதிக்கு வால்பாறை போலீஸ் இன்ஸ்பெக்டர் கற்பகம் நேரில் சென்று காவலன் செயலியை பயன்படுத்தி இலவச தொலைபேசி சேவை எண்ணை எவ்வாறு பயன்படுத்துவது எந்தெந்த சூழ்நிலைகளுக்கு பயன்படுத்த வேண்டும் என்று விளக்கம் அளித்தார்.
அதன்படி பணிபுரியக்கூடிய இடங்கள், வழிப் பயணங்கள், குடியிருப்பு பகுதிகள் போன்ற எந்த ஒரு இடத்தில் பாலியல் தொந்தரவுகள் ஏற்பட்டாலோ அல்லது உங்களை யாராவது கிண்டல் கேலி செய்தாலோ உடனடியாக நீங்கள் இந்த காவலன் செயலி சேவை தொலை பேசி எண் 181- க்கு தொடர்பு கொண்டு தகவல் தெரிவித்தால் சம்பந்தப்பட்ட இடத்திற்கு போலீசார் வந்து உங்களுக்கு தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற் கொண்டு உரிய நடவடிக்கை எடுப்பார்கள் என்று விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.