ஈரோடு மாவட்டத்தில் மேலும் 79 பேருக்கு கொரோனா

ஈரோடு மாவட்டத்தில் மேலும் 79 பேருக்கு கொரோனா ஏற்பட்டுள்ளது.

Update: 2021-10-29 21:23 GMT
ஈரோடு
சுகாதாரத்துறை சார்பில் வெளியிடப்பட்ட பட்டியலின்படி ஈரோடு மாவட்டத்தில் நேற்று புதிதாக மேலும் 79 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதனால் மாவட்டத்தில் மொத்த பாதிப்பு 1 லட்சத்து 4 ஆயிரத்து 164 ஆக உயர்ந்தது. மேலும் பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்த 92 பேர் நேற்று குணமடைந்து வீடு திரும்பினர். இதுவரை மாவட்டத்தில் மொத்தம் 1 லட்சத்து 2 ஆயிரத்து 645 பேர் கொரோனா தொற்றில் இருந்து மீண்டு உள்ளனர்.
மாவட்டத்தில் கொரோனாவுக்கு இதுவரை 682 பேர் பலியாகி உள்ள நிலையில் தற்போது தொற்று உள்ள 837 பேர் பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இதற்கிடையில் ஈரோடு மாவட்டத்தில் நேற்று முன்தினம் 8 ஆயிரத்து 526 பேருக்கு பரிசோதனை செய்ததில், 77 பேருக்கு கொரோனா தொற்று இருந்தது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்