வீடு புகுந்து திருட முயன்ற வாலிபர் சிக்கினார்
திருவேங்கடம் அருகே வீடு புகுந்து திருட முயன்ற வாலிபர் சிக்கினார்.
திருவேங்கடம்:
திருவேங்கடம் அருகே சங்குபட்டியைச் சேர்ந்தவர் மணிகண்டன். இவருடைய மகன் கவுதம் (வயது 22). இவர் நேற்று முன்தினம் இரவில் அப்பகுதியைச் சேர்ந்த செல்வம் என்பவரது வீட்டின் ஓட்டு மேற்கூரையை பிரித்து உள்ளே நுழைந்து திருட முயன்றார். அப்போது சத்தம் கேட்டு கண்விழித்த செல்வம் குடும்பத்தினர், அக்கம்பக்கத்தினர் உதவியுடன் கவுதமை மடக்கி பிடித்து தர்ம அடி கொடுத்து திருவேங்கடம் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து கவுதமை கைது செய்தனர்.