அரசு ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
சிவகாசியில் அரசு ஊழியர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
சிவகாசி,
தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் சிவகாசி வட்டகிளை சார்பில் யூனியன் அலுவலகம் வளாகத்தில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு கிளைத்தலைவர் சண்முகராஜ் தலைமை தாங்கினார். மாநில செயற்குழு உறுப்பினர் ஜெயராஜ் கோரிக்கைகளை விளக்கி பேசினார். ஆர்ப்பாட்டத்தின் போது மத்திய அரசு வழங்கி உள்ளதை போல் 14 சதவீத அகவிலைப்படி உயர்வினை தீபாவளிக்கு முன்னர் தமிழக அரசு ஊழியர் களுக்கு வழங்க வேண்டும். முடக்கி வைக்கப்பட்டுள்ள ஈட்டிய விடுப்பு ஒப்பளிப்பு உரிமையினை உடன் திரும்ப வழங்க வேண்டும். தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க முன்னாள் மாநில தலைவர் சுப்பிரமணியன் தற்காலிக பணி நீக்க உத்தரவை ரத்து செய்து, ஓய்வூதியப்பலன் களை உடனே வழங்க வேண்டும் என வலியுறுத்தி கோஷம் எழுப்பப்பட்டது.