வாலிபருக்கு 3 ஆண்டு சிறை தண்டனை

வாலிபருக்கு 3 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது

Update: 2021-10-29 20:16 GMT
புதுக்கோட்டை
புதுக்கோட்டை மாவட்டம் முள்ளூர் பகுதியை சேர்ந்தவர் பாண்டி துரை (வயது26). இவர் 7-ம் வகுப்பு மாணவி ஒருவருக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக டவுன் அனைத்து மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்து பாண்டிதுரையை கைது செய்தனர். இந்த வழக்கு புதுக்கோட்டை மகிளா கோர்ட்டில் நடைபெற்று வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி சத்யா நேற்று தீர்ப்பளித்தார். இதில், பாண்டித்துரைக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ‌.30 ஆயிரம் அபாரதமும், அபராத தொகை செலுத்த தவறினால் ஓராண்டு சிறை தண்டனையும் விதித்து தீர்ப்பளித்தார்.

மேலும் செய்திகள்