கரூர் வட்ட வழங்கல் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் சோதனை

கரூர் வட்ட வழங்கல் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் சோதனை நடத்தினர்

Update: 2021-10-29 19:02 GMT
கரூர்
கரூர் ஜவகர்பஜார் சாலையில் உள்ள தாலுகா அலுவலக வளாகத்தில் கரூர் வட்ட வழங்கல் அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் நேற்று மதியம் சுமார் 2 மணியளவில் கரூர் மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை துணை போலீஸ் சூப்பிரண்டு நடராஜன் தலைமையிலான போலீசார் கரூர் வட்ட வழங்கல் அலுவலகத்தில் திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.   
தொடர்ந்து அங்கிருந்த அலுவலர்களிடம் விசாரணை நடத்தினர். பின்னர் அலுவலகத்தில் இருந்த ஆவணங்களை சரிபார்த்தனர். இதில் ரூ.2,920-க்கு ரசீது போடப்பட்டுள்ள நிலையில், ரூ.190 மட்டுமே கையிருப்பில் இருந்துள்ளது. மீதமுள்ள ரூ.2,730 பற்றாக்குறையாக இருந்தது குறித்து அலுவலகத்தில் இருந்த வட்ட வழங்கல் அலுவலர்களிடம் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் விசாரணை நடத்தினர். 
பின்னர் இரவு 7 மணி அளவில் சோதனையை முடித்து கொண்டு லஞ்ச ஒழிப்பு போலீசார் அங்கிருந்து புறப்பட்டு சென்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

மேலும் செய்திகள்