கல்யாண வெங்கடரமண சுவாமி கோவில் உண்டியல் மூலம் ரூ.29.17 லட்சம் வருமானம்
கல்யாண வெங்கடரமண சுவாமி கோவில் உண்டியல் மூலம் ரூ.29.17 லட்சம் வருமானம் கிடைத்தது
கரூர்
தாந்தோன்றிமலை கல்யாண வெங்கடரமண சுவாமி கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய தினமும் ஏராளமான பக்தர்கள் வருகின்றனர். அவ்வாறு வருகைபுரியும் பக்தர்கள் நேர்த்திக்கடனாக தங்கம், வெள்ளியிலான பொருட்கள், பணம் ஆகியவற்றை உண்டியலில் காணிக்கையாக செலுத்துகின்றனர். இந்நிலையில் நேற்று தாந்தோன்றிமலை கல்யாண வெங்கடரமணசுவாமி கோவிலில் உண்டியல் திறக்கப்பட்டு, காணிக்கை எண்ணப்பட்டது. தாந்தோன்றிமலை உதவி ஆணையர் நந்தகுமார், திருப்பூர் வாழைத்தோட்டத்து அய்யன் கோவில் உதவி ஆணையர் மேனகா ஆகியோர் முன்னிலையில் உண்டியல் எண்ணும் பணி நடைபெற்றது. உண்டியல் காணிக்கை மூலம் ரூ.29 லட்சத்து 17 ஆயிரத்து 868 ரொக்க பணமும், 87 கிராம் தங்கம், 155 கிராம் வெள்ளியும் கிடைத்தது. இப்பணியில் கோவில் பணியாளர்கள், கரூர் அரசு கலைக்கல்லூரி மாணவியர் ஈடுபட்டனர்.