போலி நகைகளை அடகு வைத்து ரூ.70 லட்சம் மோசடி செய்த நகைமதிப்பீட்டாளர் உள்பட 6 பேர் கைது

ரூ.70 லட்சம் மோசடி செய்த நகைமதிப்பீட்டாளர் உள்பட 6 பேர் கைது

Update: 2021-10-29 17:57 GMT
வேலூர்

வேலூர் அண்ணாசாலையில் தனியார் வங்கி ஒன்று உள்ளது. இந்த வங்கியின் கணக்குகளை வங்கி அதிகாரிகள் தணிக்கை செய்தனர். அப்போது 15 வங்கி கணக்குகளில் போலி நகைகள் அடமானம் வைக்கப்பட்டது தெரியவந்தது. விசாரணையில் வங்கியின் நகை மதிப்பீட்டாளர் நித்யானந்தம் (வயது 58) என்பவர் வங்கி கணக்குகளில் போலி நகைகளை அடகு வைத்து ரூ.70 லட்சத்து 28 ஆயிரம் மோசடி செய்தது தெரியவந்தது. இதைத் தொடர்ந்து, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் மாவட்ட குற்றப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் கவிதா விசாரணை மேற்கொண்டார். 

அதில் வங்கியின் நகை மதிப்பீட்டாளர் மோசடி செய்ததும், அவருடன் அவரது நண்பர்களான அர்ஜுனன் (51), கணபதி (48), பாபு (48), சாராபாய் (39), வெங்கடேசன் (41) ஆகியோர் ஈடுபட்டதும் தெரிய வந்தது. இதையடுத்து நித்தியானந்தம் உள்பட 6 பேரையும் போலீசார் கைது செய்தனர். மேலும் தலைமறைவாக உள்ள 2 பேரை தேடி வருகின்றனர். இந்த சம்பவத்தில் அவர்கள் பயன்படுத்திய போலி நகைகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.

மேலும் செய்திகள்