சங்கராபுரம் அருகே மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்த பெண் சாவு
சங்கராபுரம் அருகே மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்த பெண் சாவு
சங்கராபுரம்
கள்ளக்குறிச்சி அருகே உள்ள பெருவங்கூர் கிராமத்தை சேர்ந்தவர் தேவேந்திரன் மனைவி வள்ளி(வயது 40). சம்பவத்தன்று இவர் அவரது மகன் வேந்தன்ராஜூடன் மோட்டார் சைக்கிளில் சங்கராபுரம் அருகே உள்ள சோழம்பட்டு கிராமத்தில் உள்ள தனது உறவினரை பார்த்து வருவதற்காக சென்றார். சோழம்பட்டு சுடுகாடு வளைவு அருகே வந்த போது வேந்தன்ராஜ் திடீரென பிரேக் பிடித்தார். இதில் நிலை தடுமாறி வள்ளி மோட்டார் சைக்கிளில் இருந்து கீழே விழுந்து படுகாயம் அடைந்தார். உடனே அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக சேலத்தில் உள்ள அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலன் இன்றி வள்ளி பரிதாபமாக இறந்தார். இந்த விபத்து குறித்து சங்கராபுரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் திருமால் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.