ஜாமீனில் இருந்த போலீஸ்ஏட்டு திடீர் சாவு

ஜாமீனில் இருந்த போலீஸ்ஏட்டு திடீர் சாவு

Update: 2021-10-29 16:47 GMT
ஜாமீனில் இருந்த போலீஸ்ஏட்டு திடீர் சாவு
கோவை
மதுரை மாவட்டத்தை சேர்ந்தவர் ராஜ்குமார் (வயது 40). இவர் கோவையை அடுத்த கீரணத்தம் பகுதியில் உள்ள  உணவு கடத்தல் தடுப்பு பிரிவில் போலீஸ் ஏட்டாக பணி புரிந்தார்.

 கோவை பி.ஆர்.எஸ். பயிற்சி பள்ளி மைதானத்தில் உள்ள போலீஸ் குடியிருப்பில் தனது குடும்பத்தினருடன் வசித்து வந்தார். இந்த நிலையில் கடந்த ஆகஸ்டு மாதம் 26-ந் தேதி ரூ.2 ஆயிரம் லஞ்சம் வாங்கியதாக மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீசார் அவரை கைது செய்தனர்.
பின்னர் அவர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

 இதையடுத்து அவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். இந்த நிலையில் கடந்த சில வாரங்களுக்கு முன் ஜாமீனில் அவர் வெளியே வந்தார். நேற்று முன்தினம் இரவு அவருக்கு திடீரென்று மாரடைப்பு ஏற்பட்டது. இதையடுத்து அவர் கோவை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால் சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

மேலும் செய்திகள்