விழிப்புணர்வு முகாம்
திண்டுக்கல் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை சார்பில் விழிப்புணர்வு முகாம் நடந்தது.;
திண்டுக்கல் :
மத்திய அரசின் தகவல் ஒலிபரப்பு அமைச்சகத்தின் மதுரை மக்கள் தொடர்பு கள அலுவலகம் மற்றும் திண்டுக்கல் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை ஆகியவை இணைந்து ஆத்தூர் ஒன்றியம் என்.பஞ்சம்பட்டியில் சிறப்பு விழிப்புணர்வு முகாமை நடத்தியது. இதற்கு திண்டுக்கல் மாவட்ட திட்ட அலுவலர் தினேஷ்குமார் தலைமை தாங்கி பேசினார். அப்போது அவர், கொரோனா ஊரடங்கு காலத்தில் சுகாதாரம் பாதுகாக்கப்பட்டது. கிராமபுறங்களில் குப்பைகளை சேகரிப்பதால் அங்கு சுகாதாரம் பாதுகாக்கப்படுகிறது. குப்பைகளை சேகரிக்கும்போதே மக்கும் குப்பை, மக்காத குப்பை என பிரித்து சேகரித்தால் சுற்றுச்சூழல் பாதுகாக்கப்படும் என்றார்.
இதில் தமிழக-புதுச்சேரி மண்டல மக்கள் தொடர்பு அலுவலர் காமராஜ், திண்டுக்கல் மாவட்ட ஊரக வளர்ச்சி உதவி திட்ட அலுவலர் பிரகாஷ், ஆத்தூர் ஒன்றிய ஆணையாளர் தட்சிணாமூர்த்தி, வட்டார வளர்ச்சி அலுவலர் லாரன்ஸ், பஞ்சம்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் பாப்பாத்தி, துணைத்தலைவர் ஜோசப், ஊராட்சி செயலர் சேசுராஜ் உள்பட பலர் கலந்து கொண்டு பேசினர்.
முன்னதாக மாவட்ட நேரு இளையோர் மையம் சார்பில் நடத்தப்பட்ட பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது.