பழைய பொருட்கள் குடோனில் தீ

பட்டிவீரன்பட்டி அருகே பழைய பொருட்கள் குடோனில் தீப்பிடித்தது.

Update: 2021-10-29 16:30 GMT
பட்டிவீரன்பட்டி: 

பட்டிவீரன்பட்டி அருகே உள்ள மீனாட்சிபுரத்தில் ராஜசேகர் என்பவருடைய  குடோன் உள்ளது. இங்கு பழைய பொருட்களை வாங்கி அதனை மொத்த விலைக்கு விற்பனை செய்ய சேமித்து வைத்துள்ளனர். இ்ந்த குடோனில் நேற்று முன்தினம் இரவு தீப்பிடித்தது. இதைக்கண்ட அக்கம்பக்கத்தினர் ஓடி வந்து தீயை அணைக்க முயன்றனர். அவர்களால் தீயை அணைக்க முடியவில்லை. தீ மளமளவென பரவியது. 

இதையடுத்து அவர்கள் தீயணைப்பு படையினருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு படையினர் சுமார் 3 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. இந்த தீ விபத்திற்கான காரணம் குறித்து பட்டிவீரன்பட்டி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்