காவிரி கூட்டு குடிநீர் குழாயில் உடைப்பு
வேடசந்தூர் அருகே காவிரி கூட்டு குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் வீணாகி செல்கிறது.
வேடசந்தூர்:
கரூர் காவிரி ஆற்றில் இருந்து தண்ணீர் எடுத்து குழாய் மூலம் திண்டுக்கல் மாவட்டம் பாளையம், கோவிலூர், எரியோடு ஆகிய ஊர்களில் உள்ள தரைமட்ட நீர்த்தேக்க தொட்டிகளுக்கு கொண்டு வரப்படுகிறது.
இதில் வேடசந்தூர் அருகே உள்ள பூத்தாம்பட்டி-மாரம்பாடி இடையே மாத்தினிபட்டி பிரிவு என்னுமிடத்தில் காவிரி கூட்டுக்குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டது.
இதனால் கடந்த 2 நாட்களுக்கு மேலாக குழாயில் இருந்து குடிநீர் வீணாக வெளியேறி, அருகே உள்ள குளத்திற்கு செல்கிறது. எனவே குழாய் உடைப்பை சரி செய்ய சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.