கோவில்பட்டியில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் மறியல் போராட்டம்

கோவில்பட்டியில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் கோரிக்கைகளை வலியுறுத்தி மறியல் போராட்டம் நடத்தினர்

Update: 2021-10-29 13:33 GMT
கோவில்பட்டி:
கோவில்பட்டி அடுத்துள்ள பாண்டவர்மங்கலம் பஞ்சாயத்து அன்னை தெரசா நகர் மேற்கு, பாலாஜி நகர் பகுதிகளில் கழிவு நீர் வாறுகால் சுத்தம் செய்ய ஏற்படாமலும், சாக்கடையில் இருந்து அள்ளிய கழிவுகளை அப்புறப் படுத்தாமல் நடுரோட்டில் குவிக்கப் பட்டுள்ளதை கண்டித்தும், நேற்று மந்தித்தோப்பு ரோட்டில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தாலுகா செயலாளர் ஜி. பாபு தலைமையில் மறியல் போராட்டம் நடந்தது.
போராட்டத்தில் மாவட்ட துணைச் செயலாளர் ஜி. சேது ராமலிங்கம், நகர துணை செயலாளர் முனியசாமி, நகர குழு உறுப்பினர் விஜயலட்சுமி, தாலுகா துணைச் செயலாளர் ஜி. ராமகிருஷ்ணன், மாவட்ட குழு உறுப்பினர் பரமராஜ் மற்றும் அப்பகுதி மக்கள் கலந்து கொண்டனர்.
தகவல் அறிந்ததும் கோவில்பட்டி மேற்கு போலீஸ் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் ராஜேஷ் கண்ணன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மறியல் போராட்டம் நடத்தியவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினா். பின்னர் பஞ்சாயத்து செயலாளர் சதீஷ்குமாரை வரவழைத்து பேச்சு வார்த்தை நடத்தப்பட்டது.  உடனடியாக சுகாதாரப் பணியாளர்கள் மூலம் கழிவு நீர் வாறுகால் சுத்தம் செய்யவும், வாறுகாலில் இருந்து அள்ளிப் போட்ட கழிவுகளை அகற்றவும், நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளிக்கப்பட்டது. இதை தொடர்ந்து  சுகாதாரப் பணியாளர்கள் அந்த பணியை மேற்கொண்டனர். இதை தொடர்ந்து கம்யூனிஸ்டு கட்சியினர் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.

மேலும் செய்திகள்