9 ஆயிரம் வாகன ஓட்டிகள் மீது வழக்கு

வாகன தணிக்கையில் 9 ஆயிரத்து 37 வாகன ஓட்டிகள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு இருக்கிறது சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Update: 2021-10-29 06:19 GMT
சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-

மத்திய மோட்டார் வாகன விதிகள் 1989 பிரிவு 50 மற்றும் 51-ன் படி வாகனங்களின் நம்பர் பிளேட்டுகளில் உள்ள எழுத்துக்கள் மற்றும் எண்களின் பின்னணி நிறம், அளவு மற்றும் குறிப்பிட்ட இடைவெளிகள் இருக்க வேண்டும் எனவும், பிற வாசகங்கள், சின்னங்கள், படங்கள் நம்பர் பிளேட்டுகளில் ஒட்டவும், எழுதவும் தடைவிதிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக சென்னை போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் வாகன தணிக்கை நடத்தி விதிகளை மீறும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். அதன்படி, அரசு நிர்ணயித்த அளவுகளில் இல்லாமல், நம்பர் பிளேட்டுகள் பொருத்தி வந்த 1,878 வாகன ஓட்டிகள் மீது நேற்று வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கடந்த 3 நாட்கள் நடத்தப்பட்ட இந்த வாகன தணிக்கையில் 9 ஆயிரத்து 37 வாகன ஓட்டிகள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு இருக்கிறது.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்