பட்டாக்கத்தியால் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாட்டம்; 4 பேர் கைது
சென்னை பல்லாவரம் அருேக பட்டாக்கத்தியால் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடியதை அடுத்து போலீஸார் விசாரணை நடத்தி 4 பேரை கைது செய்தனர்.
சென்னை பல்லாவரம் அருேக உள்ள பம்மலை அடுத்த திருநீர்மலை, திருமங்கை ஆழ்வார்புரம், இரட்டை மலை சீனிவாசன் தெருவை சேர்ந்தவர் உதயகுமார்(வயது 25). டிரைவரான இவருக்கு கடந்த 26-ந் தேதி பிறந்த நாள் ஆகும்.
அவரது நண்பர்கள், அவரது பிறந்த நாள் கொண்டாட்டத்துக்கு ஏற்பாடு செய்தனர். அன்று மாலை நண்பர்களுடன் சேர்ந்து சுமார் 2 அடி நீளமுள்ள பட்டாக்கத்தியால் பிறந்த நாள் கேக்கை உதயகுமார் வெட்டினர். இதுபற்றி தகவல் அறிந்த சங்கர் நகர் போலீசார், உதயகுமார் மற்றும் அவரது நண்பர்களான சேரன்(21), அரசு(19), ரோகித்(27) ஆகிய 4 பேரை கைது செய்தனர். மேலும் தலைமறைவாக உள்ள நாகல்கேணியை சேர்ந்த பரத், சஞ்சய், மணிமங்கலத்தை சேர்ந்த சாமுவேல் உள்பட 6 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.